கத்திவாக்கம்
கத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த ஒரு நகராட்சி ஆகும். 2012-இல் கத்திவாக்கம் நகராட்சி, சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, திருவொற்றியூர் வட்டத்தில் உள்ளது. இது பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டல எண் 2, வார்டு எண் 17-இல் உள்ளது.[3] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 13°13′N 80°19′E / 13.22°N 80.32°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 32,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கத்திவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 78%; பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கத்திவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia