ஆதம்பாக்கம்
ஆதம்பாக்கம் (Adambakkam) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையின் தென் பகுதியில் அமைந்துள்ள, முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். ஆதம்பாக்கம் சென்னை மாவட்டமான, வேளச்சேரி வட்டம் மற்றும் ஆலந்தூர் வட்டத்தின் கீழ் வருகிறது. ஆதம்பாக்கத்தின் வடமேற்கில் ஆலந்தூர், மேற்கில் நங்கநல்லூர், தெற்கில் மடிப்பாக்கம், கிழக்கில் வேளச்சேரி மற்றும் வடக்கில் கிண்டி போன்ற பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதம்பாக்கத்தின் ஒரு பகுதி சென்னை மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அக்டோபர் 2011 முதல், முழுப் பகுதியும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. புவியியல்இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°12′E / 12.99°N 80.20°E ஆகும்.[3] இது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 7 மீட்டர் (23 அடி) உயரத்தில் உள்ளது. ஜீவன் நகரில் அமைந்துள்ள ஆதம்பாக்கம் ஏரி மற்றும் கக்கன் நகரில் அமைந்துள்ள வேளச்சேரி ஏரி ஆகியவை இப்பகுதியில் உள்ள இரண்டு ஏரிகள் ஆகும். அமைவிடம்சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், அடையாறு அமைந்துள்ளது. சுற்றுப் பகுதிகள்ஆதம்பாக்கத்தைச் சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், கிண்டி, நங்கநல்லூர், வாணுவம்பேட்டை, பழவந்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ஆகும். ஆதம்பாக்கம், பரங்கி மலை தொடருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது. வேளச்சேரி பகுதிக்கு அருகில் உள்ள பகுதி புனித தோமையர் மலை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இதன் சுற்று வாட்டர பகுதிகளாக புனித தோமையர் மலை, கிண்டி, வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், நங்கைநல்லூர் மற்றும் பழவந்தாங்கல் பகுதிகள் அமைந்துள்ளன. தொடருந்து மார்க்கமாகவும், பேருந்து மார்க்கமாகவும் பயணிக்க ஏதுவான பகுதி. நந்தீஸ்வரர் உட்பட புகழ் பெற்ற கோயில்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளன. நெடுஞ்சாலைகள்தெற்கு நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆதம்பக்கத்தை ஒட்டியே அமைந்துள்ளது. பள்ளிக்கூடங்கள்ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன:
மருத்துவமனைகள்ஆதம்பாக்கம் பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன
கடைவீதிஆதம்பாக்கம் பகுதியில் உள்ள கருணீகர் தெரு உள்ளபடி அப்பகுதியின் பெரிய கடைவீதியாக கருதப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள்கோயில்கள்![]()
தேவாலயங்கள்![]()
பள்ளிவாசல்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia