இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காகமேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.
வியாசர்பாடி ஜீவா (Vyasarpadi) தொடர்வண்டி நிலையம் தென்னிந்தியாவின் தொன்மையான நிலையங்களில் ஒன்றாகும். முதன்முதலில், ஆற்காட்டிற்கு, இங்கிருந்து தான் தொடருந்து விடப்பட்டது.தற்போதைய நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில், பழைய நிலையத்தின் இடிபாடுகளைக் காணலாம். ஓர் இருப்புவழிச் சந்திப்பான இங்கிருந்து, நான்கு தடங்களில், வழிகள் பிரிக்கின்றன. தெற்கத்திய வழி, சென்ட்ரலுக்குச் செல்கிறது. கிழக்கு வழி, சென்னைக் கடற்கரைச் சந்திப்பிற்குச் செல்கிறது. வடக்கத்திய வழி, கொருக்குப்பேட்டை மற்றும் கூடூர் செல்கிறது. மேற்கத்திய வழி, பெரம்பூர் மற்றும் அரக்கோணம் செல்கிறது. இந்தச் சுற்றுப் பகுதியின் பெயர் வியாசர்பாடி ஆகும். ஆயினும், தொடர்வண்டி நிலையத்திற்கு, இடத்தின் பெயருடன், மூத்த பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் பெயரையும் இணைத்து, அவரது நினைவாக வியாசர்பாடி ஜீவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடியில், டான் பாசுகோ பள்ளியும் அதனுடன் இணைந்த தேவாலயமும் மிகவும் பிரசித்தமானவை. இந்த உரோமன் கத்தோலிக்க தேவாலயம் இத்தாலிய கட்டிட வடிவமைப்புடன் கவினுற கட்டப்பட்டுள்ளது. தவிர, 'அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் உள்ளது.இங்குள்ள ரவீசுவரர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகத் தொன்மையான கோவிலாகும்.