சித்திரக்கூட மாவட்டம்
சித்திரக்கூட மாவட்டம் (அ) சித்திரகூட் மாவட்டம் (Hindi: चित्रकूट जिला)இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் 72 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் சித்திரக்கூட நகரம் ஆகும். இமமாவட்டம் சித்திரக்கூடப் பிரிவின் கீழ் உள்ளது. இது 3,45,291 சதுர கி.மீட்டர் பரப்பளவை உடையது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உத்தரப்பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இரண்டாவது மிகவும் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாவட்டம் மகோபா மாவட்டத்திற்கு பிறகு சித்திரக்கூட மாவட்டம் ஆகும்.[1]. இங்கு 990,626 மக்கள் வசிக்கின்றனர்[2]. இம்மாவட்டம் புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது. வரலாறு6 மே 1997 அன்று பந்தா மாவட்டத்திலிருந்து கார்வி மாற்று மவூ வட்டங்களை உள்ளடக்கிய இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் முதலில் சத்திரபதி சிவாஜி நகர் மாவட்டம் என பெயரிடப்பட்டது. பின்னர் 4 செப்டம்பர் 1998 அற்று சித்திரக்கூட மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பொருளாதாரம்2006 இல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சித்திரக்கூட மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[3] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்[3]. மக்கள் தொகை2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சித்திரக்கூட மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 990,626[4]. இது தோராயமாக பிஜி நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[5]. இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 448வது இடத்தில் உள்ளது.[4] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 315 inhabitants per square kilometre (820/sq mi).[4] மேலும் சித்திரக்கூட மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 29.29%.[4] சித்திரக்கூட மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 879 பெண்கள் உள்ளனர்.[4] மேலும் சித்திரக்கூட மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 66.52%.[4] மேற்கோள்கள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia