தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி
தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjung Piai; ஆங்கிலம்: Tanjung Piai Federal Constituency; சீனம்: 丹绒比艾国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; பொந்தியான் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P165) ஆகும்.[6] தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி 2004-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] தஞ்சோங் பியாய்தஞ்சோங் பியாய் என்பது ஜொகூர் மாநிலத்தின் பொந்தியான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் தென்முனையில் ஐரோப்பா; ஆசியா கண்டங்களை இணைக்கும் ஐரோவாசியாவின் (Eurasia) தென்முனை நிலப் பகுதி இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளது. தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம் பொந்தியான் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சோங் பியாய் கடலோரச் சதுப்புநிலம், அனைத்துலக அளவில் ஒரு முக்கியமான ராம்சார் தளமாகும். ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிப்படுத்த இந்த இடம் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[8] காட்டு மரங்களால் கட்டப்பட்ட படகுத் துறைகள்; அரிதான கடற்கரையோரச் சூழல்; மற்றும் மாசு மறுவற்றச் சதுப்புநிலக் காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படுகிறது. தஞ்சோங் பியாய் மக்களவைத் தொகுதிதஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.74%) பெண் (49.26%)
தஞ்சோங் பியாய் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (5.84%) 21-29 (20.39%) 30-39 (20.86%) 40-49 (17.21%) 50-59 (15.29%) 60-69 (11.39%) 70-79 (6.22%) 80-89 (2.27%) + 90 (0.54%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia