தெங்காரா மக்களவைத் தொகுதி
தெங்காரா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tenggara; ஆங்கிலம்: Tenggara Federal Constituency; சீனம்: 东南镇国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P155) ஆகும்.[5] தெங்காரா மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் இருந்து தெங்காரா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கோத்தா திங்கி மாவட்டம்கோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது. கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. ஆகும். இந்தப் பரப்பளவு மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[7] தெங்காரா மக்களவைத் தொகுதி
தெங்காரா தேர்தல் முடிவுகள்தெங்காரா வாக்காளர்களின் வயது விவரம் (2022) 18-20 (7.48%) 21-29 (24.07%) 30-39 (23.34%) 40-49 (17.82%) 50-59 (13.18%) 60-69 (8.44%) 70-79 (4.19%) 80-89 (1.32%) + 90 (0.16%)
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia