மூவார் மக்களவைத் தொகுதி
மூவார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Muar; ஆங்கிலம்: Muar Federal Constituency; சீனம்: 麻坡国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P146) ஆகும்.[5] மூவார் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து மூவார் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] மூவார் மாவட்டம்மூவார் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். மூவார் மாவட்டம் முன்பு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. மூவார் அல்லது பண்டார் மகாராணி என்பது மற்றொரு பிரிவு. லேடாங் எனும் தங்காக் என்பது மற்றொரு பிரிவு. மூவார் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 150 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 143 கி.மீ.; மலாக்கா மாநகரில் இருந்து 47 கி.மீ.; சிங்கப்பூரில் இருந்து 179 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. மூவார் மாவட்டம், சிங்கப்பூரைப் போல இரண்டரை மடங்கு பெரிய நிலப்பகுதியைக் கொண்டது. இந்த மாவட்டத்திற்கு மூவார் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. மலாக்கா நீரிணையின் கரையோரத்தில்; மூவார் ஆற்றின் முகப்பில் மூவார் நகரம் அமைந்து உள்ளது. மூவார் மக்களவை தொகுதி
மூவார் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia