இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri Federal Constituency; சீனம்: 依斯干达公主城国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P162) ஆகும்.[6] இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2018-ஆம் ஆண்டில் இருந்து இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] இசுகந்தர் மலேசியாஇசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, ஜொகூர் மாநிலத்தின் இசுகந்தர் மலேசியா வளர்ச்சி மண்டலத்தில் உள்ள ஒரு தொகுதி ஆகும். இசுகந்தர் மலேசியா, தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8] இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10] 2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதிஇசுகந்தர் புத்திரி தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.07%) பெண் (49.93%)
இசுகந்தர் புத்திரி தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (7.48%) 21-29 (23.76%) 30-39 (21.23%) 40-49 (18.09%) 50-59 (15.08%) 60-69 (9.58%) 70-79 (3.72%) 80-89 (0.89%) + 90 (0.17%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia