மெர்சிங் மக்களவைத் தொகுதி
மெர்சிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Mersing; ஆங்கிலம்: Mersing Federal Constituency; சீனம்: 丰盛港国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் மெர்சிங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P154) ஆகும்.[5] மெர்சிங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து மெர்சிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] மெர்சிங் மாவட்டம்மெர்சிங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மெர்சிங் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. மெர்சிங் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங், பெக்கான் அரச நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. தென் சீனக் கடலைக் கடற்கரையாகக் கொண்ட மெர்சிங் மாவட்டம் நிறைய சுற்றுலாத் தீவுகளைக் கொண்டது. இங்கு அழகு அழகான கடற்கரைகள்; குறைந்த விலையில் தங்கும் விடுதிகள்; தடங்கல் இல்லா படகுச் சேவைகள் உள்ளன. மேலும் பல்வகையான கடல்வகை உணவுப் பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன.[7] மெர்சிங் மக்களவைத் தொகுதிமெர்சிங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரம் (2022) 18-20 (5.47%) 21-29 (20.77%) 30-39 (27.59%) 40-49 (16.28%) 50-59 (11.36%) 60-69 (11.95%) 70-79 (5%) 80-89 (1.25%) + 90 (0.33%)
மெர்சிங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரம் (2022) ஆண் (50.45%) பெண் (49.55%)
மெர்சிங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia