தெப்ராவ் மக்களவைத் தொகுதி
தெப்ராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tebrau; ஆங்கிலம்: Tebrau Federal Constituency; சீனம்: 地不佬国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P158) ஆகும்.[6] தெப்ராவ் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து தெப்ராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] ஜொகூர் பாரு மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு ஜொகூர் பாரு தலைநகரமாக விளங்குகிறது. ஜொகூர் பாரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே ஜொகூர் நீரிணை உள்ளன. ஜொகூர் பாரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு பெருநகர மயமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் துரிதமான வளர்ச்சியினால், மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று தனித்தனிப் பிரிவுகளாக நிர்வாகம் செய்யப் படுகிறது. தெப்ராவ் மக்களவைத் தொகுதிதெப்ராவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (50.37%) பெண் (49.63%)
தெப்ராவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (9.67%) 21-29 (27.08%) 30-39 (20.41%) 40-49 (18.27%) 50-59 (14%) 60-69 (7.14%) 70-79 (2.56%) 80-89 (0.72%) + 90 (0.15%)
தெப்ராவ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia