பொந்தியான் மக்களவைத் தொகுதி
பொந்தியான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pontian; ஆங்கிலம்: Pontian Federal Constituency; சீனம்: 笨珍国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P164) ஆகும்.[6] பொந்தியான் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பொந்தியான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] பொந்தியான் மாவட்டம்பொந்தியான் மாவட்டம் என்பது ஜொகூர் மாநிலத்தின், தென் மேற்கில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு பொந்தியான் கிச்சில் நகரம் தலைநகரமாக உள்ளது. பொந்தியான் மாவட்டம், அன்னாசிப் பண்ணைகள் மற்றும் செம்பனை தோட்டங்களின் மையமாக இருந்தது. தற்போது இந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கைச் சூழல் சுற்றுலா, மீன்பிடி, கடல்சார் மீன் வளர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகும்.[8] இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் சதுப்பு நிலங்களைக் கொண்டவை; அவற்றின் முக்கியத் தொழிலாக மீன்பிடித் தொழில் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரங்களின் பெயர்களிலும் பொந்தியான் எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது; பொந்தியான் பெசார் மற்றும் பொந்தியான் கிச்சில். பொந்தியான் மக்களவைத் தொகுதிபொந்தியான் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.68%) பெண் (50.32%)
பொந்தியான் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (5.65%) 21-29 (20.19%) 30-39 (22.07%) 40-49 (16.49%) 50-59 (14.78%) 60-69 (11.24%) 70-79 (6.52%) 80-89 (2.49%) + 90 (0.57%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia