கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Tinggi; ஆங்கிலம்: Kota Tinggi Federal Constituency; சீனம்: 哥打丁宜国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P156) ஆகும்.[6] கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] கோத்தா திங்கி மாவட்டம்கோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது. கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[8] கோத்தா திங்கி மக்களவைத் தொகுதிகோத்தா திங்கி தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரம் (2022) ஆண் (50.16%) பெண் (49.84%)
கோத்தா திங்கி தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரம் (2022) 18-20 (5.06%) 21-29 (18.28%) 30-39 (26.27%) 40-49 (19.2%) 50-59 (11.9%) 60-69 (10.93%) 70-79 (6.64%) 80-89 (1.44%) + 90 (0.28%)
கோத்தா திங்கி தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia