செம்புரோங் மக்களவைத் தொகுதி
செம்புரோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sembrong; ஆங்கிலம்: Sembrong Federal Constituency; சீனம்: 森布隆国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P153) ஆகும்.[5] செம்புரோங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து செம்புரோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] குளுவாங் மாவட்டம்குளுவாங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமும் குளுவாங் நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன. குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
செம்புரோங் மக்களவைத் தொகுதி
செம்புரோங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia