லாபிஸ் மக்களவைத் தொகுதி
லாபிஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Labis; ஆங்கிலம்: Labis Federal Constituency; சீனம்: 拉美士国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P142) ஆகும்.[6] லாபிஸ் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து லாபிஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7] லாபிஸ் நகரம்லாபிஸ் நகரம் ஜொகூர் மாநிலத்தில் சிகாமட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். தீபகற்ப மலேசியாவின் பழைய வடக்கு-தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலை, லாபிஸ் நகரின் வழியாகச் செல்கிறது. சிங்கப்பூர்; ஜொகூர் பாரு மாநகரங்களுக்குப் பயணிப்பவர்கள் இந்த நகரைக் கடந்து செல்ல வேண்டும். மலேசியாவின் முதன்மைத் தொடருந்து சேவையான மலாயா தொடருந்து நிறுவனம், தெற்கில் இருக்கும் ஜொகூர் மாநிலத் தலைநகர் ஜொகூர் பாரு நகருடன் இந்த நகரத்தை இணைக்கின்றது. முன்பு காலத்தில், கம்போங் பாயா மேரா (Kampung Paya Merah) என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமமாக லாபிஸ் இருந்தது. இங்கு அதிகமாகக் காணப்பட்ட நன்னீர் ஆமைகளில் இருந்து இந்த இடத்திற்கு லாபிஸ் என்று பெயர் வந்தது. லாபிஸ் மக்களவை தொகுதி
லாபிஸ் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia