செகிஜாங் மக்களவைத் தொகுதி
செகிஜாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sekijang; ஆங்கிலம்: Sekijang Federal Constituency; சீனம்: 士基央国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P141) ஆகும்.[5] செகிஜாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து செகிஜாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சிகாமட் மாவட்டம்சிகாமட் மாவட்டம் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். சிகாமட் மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. இந்த மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது. செகிஜாங் மக்களவை தொகுதி
செகிஜாங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia