பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி
பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Parit Sulong; ஆங்கிலம்: Parit Sulong Federal Constituency; சீனம்: 巴力士隆国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P147) ஆகும்.[5] பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பத்து பகாட் மாவட்டம்பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன. பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பாரிட் சூலோங் மக்களவைத் தொகுதி
பாரிட் சூலோங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia