பாகோ மக்களவைத் தொகுதி
பாகோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pagoh; ஆங்கிலம்: Pagoh Federal Constituency; சீனம்: 巴莪国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் தங்காக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P143) ஆகும்.[5] பாகோ மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து பாகோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] தங்காக் மாவட்டம்தங்காக் மாவட்டம் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்திற்கு தங்காக் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. கோலாலம்பூர் மாநகரில் இருந்து 136 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 180 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் தங்காக் மாவட்டம் அமைந்து உள்ளது. மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகியவை தங்காக் மாவட்டத்தின் எல்லை மாநிலங்களாக உள்ளன. மலேசியாவில் பிரபலமான குனோங் லேடாங், இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. மாவட்டத்தின் தலைநகரமான தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. லேடாங் மலை வரலாற்றுப் புகழ் பெற்றது.[7] பாகோ மக்களவை தொகுதி
பாகோ தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia