தோபா தேக்சிங் மாவட்டம்
தோபா தேக்சிங் மாவட்டம் (Toba Tek Singh District) (Urdu: ضلع ٹوبہ ٹیک سنگھ) தெற்காசியாவின் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ளது. [1] இதன் நிர்வாகத் தலைமையிடம் தோபா தேக்சிங் நகரம் ஆகும். இம்மாவட்டம் 1982-இல் புதிதாக துவக்கப்பட்டது. பெயர் காராணம்சீக்கிய மத குரு தேக் பகதூர் நினைவாக இம்மாவட்டத்திற்கும், மாவட்டத்தின் தலைமையிட நகரத்திற்கும் தோபா தேக்சிங் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம்3,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தோபா தேக்சிங் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக தோபா தேக்சிங், கோஜ்ரா, பீர் மகால் மற்றும் கமாலியா என நான்கு வருவாய் வட்டங்களாக பிரித்துள்ளனர். இம்மாவட்டத்தில் எண்பத்தி இரண்டு கிராம ஒன்றியக் குழுக்கள் உள்ளது. [2] நகரங்கள்தோபா தேக்சிங் மாவட்டத்தில் பீர் மகால், கோஜ்ரா, கமாலியா, இராஜானா, சண்டியலியான்வாலி, சக்#270 மற்றும் தோபா தேக் சிங் முக்கிய நகரஙகள் ஆகும். [3] மக்கள் தொகையியல்டிசம்பர் 2012-ஆம் ஆண்டின் மாவட்ட ஆட்சியாளரின் அறிக்கைப் படி, 3,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தோபா தேக்சிங் மாவட்டத்தின் மக்கள் தொகை 19,93,000 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 613 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி, சராய்கி மொழி, உருது மொழி மற்றும் ஆங்கிலம் பேசப்படுகிறது.[4] பொருளாதாரம்வேளாண் பொருளாதாரம்தோபா தேக்சிங் மாவட்டத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் கரும்பு, கோதுமை, பருத்தி, நெல், பருப்பு, பயறு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், மா, ஆரஞ்ச், கொய்யா, எலுமிச்சம் பழம் ஆகும். தொழில்கள்இம்மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலுக்கான கருவிகாள், மிதிவண்டிகளின் உதிரி பாகங்கள், சிமெண்ட், பருத்திப் பஞ்சு ஆலைகள், ரொட்டி தயாரித்தல், மருத்துவமனைக்கான மருந்து & மாத்திரைகள் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி மாவு ஆலைகள், தோல் காலணிகள் தயாரித்தல், கோழி வளர்ப்பு, மின் உற்பத்தி, சோப்பு தயாரிப்பு, கரும்பாலைகள், சேமியா, துணி மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது.[5] கல்விதோபா தேக்சிங் மாவட்டம் கல்வி வளர்ச்சி கொண்டது. இங்குள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள்: கமாலியா அரசு பட்டமேற்படிப்பு கல்லூரி, தேபோ தேக்சிங் அரசு மகளிர் பட்டப்படிப்புக் கல்லூரி, தோபா தேக்சிங் மருத்துவக் கல்லூரி, கோஜ்ரா அரசுக் கல்லூரி, கோஜ்ரா அரசு பெண்கள் கல்லூரி, கோட்ட பொதுப் பள்ளி & கல்லூரி தோபா தேக்சிங், தோபா தேக்சிங் பஞ்சாப் கல்லூரி, தோபா தேக்சிங் இசுலாமியக் கல்லூரி, தோபா தேக்சிங் தேசியக் கல்லூரி, தோபா தேக்சிங் சுல்தான் அறக்கட்டளை கல்லூரி, தோபா தேக்சிங் ஸ்டாண்டர்டு கல்லூரி, தோபா தேக்சிங் சுப்பீரியர் கல்லூரி, கோஜ்ரா சிப்லீ கல்லூரி, கமாலியா குவாதி ஆசம் கல்லூரி, பீர் மகால் ஜின்னா கல்லூரி, பீர் மகால் பர்கான் கல்லூரி, பீர் மகால் அறிஞர்கள் கல்லூரி ஆகும். அரசியல்இம்மாவட்டம் பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்திற்கு மூன்று உறுப்பினர்களை[6][7]தேர்ந்தெடுத்து அனுப்பிகிறது. மேலும் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்திற்கு ஏழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia