சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம்
சன்வே விரைவுப் பேருந்து வழித்தடம் அல்லது பிஆர்டி சன்வே வழித்தடம் (ஆங்கிலம்: BRT Sunway Line (BRT); மலாய்: BRT Laluan Sunway); சீனம்: 双威BRT线) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தின் பெட்டாலிங் ஜெயா பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் பேருந்து வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. உலகின் முதல் முழு மின்சார விரைவுப் பேருந்துச் சேவை என்றும் பெயர் பெற்றுள்ளது.[2] இந்த வழித்தடம் ரேபிட் கேஎல் பேருந்து நிறுவனத்தால் இயக்கப்படுகிறது; மற்றும் பண்டார் சன்வே மற்றும் சுபாங் ஜெயாவில் மக்கள் அதிக அடர்த்தியான பகுதிகளுக்கு சேவை செய்வதற்காக 2015-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுவிளக்கம்BRT - Bus Rapid Transit - பிஆர்டி பேருந்து சேவை பிஆர்டி பேருந்துகள் (BRT Sunway Line Buses) சாதாரண சாலைப் போக்குவரத்துடன் தங்கள் பாதைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. அவற்றுக்கென்று சிறப்பான உயர்மட்டப் பாதைகள் உள்ளன. விரைவுத் தொடருந்து போக்குவரத்திற்கு வழங்கப்பட்டு இருக்கும் உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் போன்று இந்தப் பேருந்துகளுக்கும் பாதைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், ரேபிட் பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்து நடத்துனர்களுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்த உரிமை வழங்கப்படவில்லை. மற்றும் உயர்த்தப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்த வேறு மாற்றுவழிச் சரிவுப் பாதைகளும் இல்லை. வழித்தட அமைப்புமுறைநெரிசலைத் தவிர்க்கவும்; அதிக அளவிலான பயணிகள் எளிய முறையில் பேருந்துகளைப் பயன்படுத்துவதற்காகவும் இந்தச் சிறப்பு வழித்தட அமைப்புமுறை பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், இந்தப் பேருந்து அமைப்பு முறைமை; செரி செத்தியா கொமுட்டர் நிலையத்திற்கும் மற்றும் யுஎஸ்ஜே 7 நிலையத்திற்கும் இடையேயான 5.4 கிமீ (3.4 மைல்) பாதையில் மட்டுமே அமைந்துள்ளது.[3][4] நிலையங்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
காட்சியகம்மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia