கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி (மலாய்: KTM Komuter Sektor Utaraஆங்கிலம்: KTM Komuter Northern Sectorr; சீனம்: 马来亚铁道通勤铁路北马区); என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதி நகரங்களுக்கு இடையிலான மின்சாரத் தொடருந்து சேவைகளை வழங்கும் கேடிஎம் கொமுட்டர் சேவையின் வடக்குப் பகுதியைக் குறிப்பதாகும். மலாயா தொடருந்து நிறுவனம் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) எனும் நிறுவனத்தின் 5 சேவைகளில் இந்தச் சேவையும் ஒன்றாகும்.
கேடிஎம் கொமுட்டர் சேவை பன்முக மின்சாரத் தொடருந்துகளை (Electric Multiple-Unit) (EMU) பயன்படுத்துகிறது. இதுவே மலேசிய தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்பட்ட முதலாவது மின்சாரத் தொடருந்து சேவையாகும். இதற்குப் பின்னர்தான் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS); ஆகிய இரு சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தன.[1]
பொது
2014 டிசம்பர் மாதம் ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டம் நிறைவு அடைந்ததைத் தொடர்ந்து 2015 செப்டம்பர் 11-ஆம் தேதி இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சேவை பின்னர் ஈப்போ தொடருந்து நிலையத்தில் இருந்து பாடாங் பெசார் வரை கேடிஎம் இடிஎஸ் சேவை என நீட்டிக்கப்பட்டது.[2]