ரேபிட் ரெயில்
ரேபிட் ரெயில் (ஆங்கிலம்: Rapid Rail; மலாய்: Rapid Rail Sdn Bhd) என்பது கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்குச் சேவை செய்யும் விரைவுப் போக்குவரத்து (Rapid Transit) மெட்ரோ (Metro) நிறுவனம் ஆகும்.[1] பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனம்; மற்றும் ஐந்து விரைவுப் போக்குவரத்து வழித்தடங்களில் (Rapid Transit Lines) சேவைகளில் ஈடுபட்டுள்ள ஒரே நிறுவனமும் ஆகும்; அத்துடன் ஒரு கூட்டு அமைப்பாக ரேபிட் கேஎல் (Rapid KL) எனும் விரைவுப் போக்குவரத்து அமைப்பையும் செயல்படுத்துகிறது.[2] பொதுஇந்த ரேபிட் ரெயில் அமைப்பானது, தற்போது மூன்று இலகு விரைவு தொடருந்து (எல்ஆர்டி) (Light Rapid Transit) வழித்தடங்கள்; இரண்டு பெரும் விரைவு தொடருந்து (எம்ஆர்டி) (Mass Rapid Transit) வழித்தடங்கள்; மற்றும் ஒரு ஒற்றைத் தண்டூர்தி (Monorail) வழித்தடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[3] தொடருந்து சேவைகள் காலை 6:00 மணி தொடங்கி நள்ளிரவு வரையில் செயல்படுகின்றன. உச்ச நேரத்தின் போது மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறையும்; உச்ச நேரம் அல்லாத போது பதினான்கு நிமிடங்களுக்கு ஒரு முறையும் சேவைகள் வழங்கப்படுகின்றன. தொடருந்துகள்இந்தத் தொடருந்துகள் ஓட்டுநர் இல்லாதவை; ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாதையில் பயணிப்பதற்கும்; குறிப்பிட்ட நிலையங்களில் நிறுத்துவதற்கும்; தானியங்கி முறையில் இயங்குகின்றன. இருப்பினும்கூட, அவசரநிலையின் போது பயன்படுத்துவதற்காக, தொடருந்துகளின் ஒவ்வொரு முனையிலும் மனித ஓட்டுநர்களுக்கான கட்டுப்பாட்டுக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia