இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் வருமாறு:
பொறுப்பு வகிப்பவர்கள்
மாநில அரசுகள்
நிகழ்வுகள்
- சனவரி 2 - 2016 பண மதிப்பு நீக்கத்திற்கு எதிராக இந்திய அரசு மீது தொடுக்கப்பட்ட 56 வழக்குகளை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது.[6][7][8]
- சனவரி 18 - திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- சனவரி 13 - 29 - 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டப் போட்டிகள் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா நகரங்களில் நடைபெற்றது.
- மார்ச் 23 - மோடி சமூகத்தவரை அவமதித்த குற்ற வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.[9][10]இதனால் இவரது மக்களவை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.[11]
- மார்ச் 24 - குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[12][13]
- ஏப்ரல் 11 - புள்ளியியல் அறிஞராக சி. ஆர். ராவுக்கு தமது 102வது அகவையில் புள்ளியியலில் பன்னாட்டுப் பரிசு அறிவிக்கப்பட்டது.[14]
- மே 3 - மணிப்பூர் வன்முறைகளில் 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.[15]
- மே 13 - 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்றது.
- சூன் 2 - ஒடிசா தொடருந்து விபத்துக்களில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் காயமடைந்தனர்.[16][17][18]
- சூலை 18 -பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தலைமையில் 26 கட்சிகள் கொண்ட இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி உருவானது.[19]
- சூலை 14 - சந்திரயான்-3 நிலாவிற்கு ஏவப்பட்டது.
- ஆகஸ்டு 23 - பிரக்யான் தரையூர்தி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டது.
- ஆகஸ்டு 24 - 2023 சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் ர. பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தையும், நார்வேயின் மாக்னசு கார்ல்சன் முதல் இடத்தையும் பிடித்தனர்.
- செப்டம்பர் 2 -சூரியனை ஆய்வு செய்யும் செயற்கை கோள் ஆதித்தியா எல் 1 விண்ணிற்கு ஏவப்பட்டது.
- செப்டம்பர் 9 --2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு ஜி 20 உச்சி மாநாடு புது தில்லியில் கூடியது. இக்கூட்டத்தில் ஆப்பிரிக்க ஒன்றியம் புதிய உறுப்பினராக சேர்க்கப்பட்டது.
- அக்டோபர் 17 - இந்திய உச்ச நீதிமன்றம், தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு எதிராக தீர்ப்பு அளித்தது.
- நவம்பர் 12 -உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 46 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
- நவம்பர் 19 - 2023 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும்; இந்தியா இரண்டாம் இடத்தையும் பெற்றது.
- டிசம்பர் 3 - இராஜஸ்தன் மத்தியப் பிரதேசம், தெலங்காணா மற்றும் சத்தீஷ்கர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 3 மாநில சட்டப் பேரரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. தெலங்காணாவில் மட்டும் இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்றது.
- டிசம்பர் 3 - மிக்ஜாம் புயல் வலுப்பெற்று 5ம் நாள் நெல்லூர்-மச்சிலிப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது. இப்புயலால் சென்னை மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டது.
- டிசம்பர் 4 - 2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது.
- டிசம்பர் 7 - மிசோரம் முதலமைச்சராக லால்துஹோமா பதவியேற்றார்.
- டிசம்பர் 7 - தெலங்காணா முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
- டிசம்பர் 11 - ஜம்மு காஷ்மீருக்கு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஐ சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 மூலம் நீக்கியத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது[20][21][22]:
- டிசம்பர் 12 - மோகன் யாதவ் மத்தியப் பிரதேச முதலமைச்சராகவும், ஜெகதீஷ் தேவ்தா மற்றும் இராஜேந்திர சுக்லா துணை முதலமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
- டிசம்பர் 13 - நாடாளுமன்றத் தாக்குதல்
- டிசம்பர் 13 - விஷ்ணு தேவ் சாய் சத்தீஸ்கர் முதலமைச்சராகவும், அருண் சாவ் & விஜய் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றனர்.
- டிசம்பர் 15 - பஜன்லால் சர்மா இராஜஸ்தான் முதலமைச்சராகவும்; துணை முதலமைச்சர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா பதவியேற்றனர்.[23][24][25]
இறப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்