அசா செயா மாவட்டம்
![]() அசா செயா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Asajaya; ஆங்கிலம்: Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம். அசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[1] சமரகான் பிரிவுசமரகான் பிரிவு சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[2] சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அசாஜெயா மாவட்டமும் ஒன்றாகும்.
கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3] மக்கள் தொகை
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia