சூலாவ் மக்களவைத் தொகுதி
சூலாவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sarikei; ஆங்கிலம்: Sarikei Federal Constituency; சீனம்: 泗里街联邦选区) என்பது மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவில் சரிக்கே மாவட்டம்; பக்கான் மாவட்டம்; சூலாவ் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P209) ஆகும்.[5] சூலாவ் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து சூலாவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சரிக்கே பிரிவுசரிக்கே பிரிவு (Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கே பிரிவின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. 1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது. சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது. சூலாவ் மக்களவைத் தொகுதிசூலாவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சரவாக் பூமிபுத்ரா (91.8%) மலாயர் (1.4%) சீனர் (5.3%) இதர இனத்தவர் (1.5%)
சூலாவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (51.03%) பெண் (51.03%)
சூலாவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (6.3%) 21-29 (20.47%) 30-39 (19.97%) 40-49 (17.9%) 50-59 (16.75%) 60-69 (10.36%) 70-79 (5.25%) 80-89 (1.98%) + 90 (1.02%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia