2 ஏப்ரல் 1974 - தலாத் நகரத்தை நிர்வாக மையமாகக் கொண்டு, தலாத் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் சிபு பிரிவின் கீழ் இருந்தது; மற்றும் ஓயா (Oya), பெரும் தலாத் (Dalat Proper), நங்கா பாவோ (Nanga Baoh), நங்கா தமின் (Nanga Tamin), இசுதாபாங் (Stapang), இசுகிம் செகுவா (Skim Sekuau) மற்றும் நங்கா பாக்கோ (Nanga Pakoh) ஆகிய இடங்களை உள்ளடக்கி இருந்தது. மாவட்டத்தில் 4 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 115 நீள வீடுகள் இருந்தன.
1 மார்ச் 2002 - முக்கா பகுதி முக்கா பிரிவு என தரம் உயர்த்தப்பட்டது; மாவட்டத்தில் 3 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 22 நீள வீடுகள் இருந்தன.
பொருளாதாரம்
தலாத் நகரத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் சவ்வரிசி மாவு ஆகும். தலாத் மாவட்டத்தில் 28,765 எக்டர் வேளாண் நிலம் சவ்வரிசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சவ்வரிசி மாவு தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு 75 டன் சவ்வரிசி மாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.[1]