பிந்துலு பிரிவு
பிந்துலு பிரிவு (மலாய் மொழி: Bahagian Bintulu; ஆங்கிலம்: Bintulu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த டிவிசன் எனும் நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Division மலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள். மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. பிந்துலு பிரிவின் பரப்பளவு 12,166 சதுர கிலோமீட்டர். பொதுபிந்துலு பிரிவு மாவட்டங்கள்சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு; மற்றும் மிரி பிரிவு ஆகிய பிரிவுகளுக்குப் பிறகு, பிந்துலு பிரிவு மூன்றாவது பெரிய பிரிவு ஆகும். பிந்துலு பிரிவில் உள்ள மாவட்டங்கள்: பிந்துலு பிரிவில் உள்ள மூன்று முக்கிய நகரங்கள்: பிந்துலு; தாதாவு (Tatau) மற்றும் செபாவு (Sebauh). சரவாக்கின் நான்காவது பெரிய நகரமாக பிந்துலு நகரம் விளங்குகிறது. பிந்துலு பிரிவின் பெரும்பாலான மக்கள் இந்த நகரத்தில் தான் அதிகமாக உள்ளனர். சொல் பிறப்பியல்16-ஆம் நூற்றாண்டின் போது, போர்த்துகீசியகடலோடிகளால் "ரிவர் டி புருலு" (River de Burulu) என்று பிந்துலுவிற்குப் பெயரிடப்பட்டது. பிந்துலு என்ற பெயரில் பல புராணக் கதைகள் உள்ளன. புரூக் வம்சத்தின் வெள்ளை இராஜா ஆட்சியின் போது, சரவாக் பழங்குடியினரின் சமூகத்தில், தங்கள் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டையாடுதல் (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.[1] பின்னர் வேட்டையாடிய தலைகளை கெமெனா ஆற்றில் (Kemena River) வீசி விடுவார்கள். அதன் பிறகு ஆற்றில் இறங்கி அந்தத் தலைகளைச் சேகரிப்பார்கள். தலைகளைச் சேகரிக்கும் நடைமுறையை "மெந்து உலாவ்" (Mentu Ulau) என உள்ளூர்ப் பூர்வீக மொழியில் அழைத்தார்கள்.[2] இந்த மெந்து உலாவ் எனும் சொல்லில் இருந்து பிந்துலு எனும் சொல் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.[3] புள்ளி விவரங்கள்
நிர்வாகம்![]() இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia