இலிம்பாங் பிரிவு
இலிம்பாங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும். ஆங்கிலத்தில் டிவிசன் (Division) என்று அழைக்கிறார்கள். மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாக (Daerah) பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. பொதுஇலிம்பாங் பிரிவின் பரப்பளவு 7,788 சதுர கிலோமீட்டர். சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு; மிரி பிரிவு மற்றும் பிந்துலு பிரிவு ஆகிய பிரிவுகளுக்குப் பிறகு, இலிம்பாங் பிரிவு நான்காவது பெரிய பிரிவு ஆகும். இலிம்பாங் பிரிவு மாவட்டங்கள்இலிம்பாங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:[2] நிலவியல்இலிம்பாங் பிரிவு புரூணை நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் பிரிவின் மேற்கில் மேற்கு புரூணை; மற்றும் இலிம்பாங் மற்றும் லாவாசு மாவட்டங்களுக்கு நடுவில் தெம்புராங் மாவட்டம் உள்ளது. அதே நேரத்தில் இலிம்பாங் பிரிவின் லாவாசு மாவட்டமும்; தெம்புராங் மாவட்டமும்; மலேசியாவின் மற்றொரு மாநிலமான சபா மாநிலத்திற்கு இடையே அமைந்து உள்ளன. இந்தப் புவியியல் சூழ்நிலையினால், சாலை வழியாக லிம்பாங் பிரிவுக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியேறினாலும் குடியேற்றச் சோதனைகள் நடைபெறுகின்றன. காட்சியகம்இலிம்பாங் பிரிவின் குடிநுழைவு, சுங்கத்துறை முத்திரைகளின் படங்கள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia