1. தென்மாநகர மன்றம் Kuching South City Council (MBKS) 2. வடமாநகர மன்றம் Kuching North City Hall (DBKU) 3. பாடவான் மன்றம் Padawan Municipal Council (MPP) 4. பாவு மாவட்ட மன்றம் Bau District Council (MDB) 5. லுண்டு மாவட்ட மன்றம் Lundu District Council (MDL)
கூச்சிங் பிரிவு (மலாய் மொழி: Bahagian Kuching; ஆங்கிலம்: Kuching Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். முன்பு முதல் பிரிவு(First Division) என்று அழைக்கப்பட்டது. இந்தப் பிரிவுதான் நவீன சரவாக்கின் மையம் மற்றும் தொடக்கப் புள்ளியாகும்.
கூச்சிங் பிரிவின் இன அமைப்பை, சரவாக் முழுமைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சற்றே வேறுபட்டது. மலாய்க்காரர்களும் மற்றும் சீனர்களும் கூச்சிங் நகரில் பெரும்பான்மையான இனக் குழுக்களாக உள்ளனர். கூச்சிங் பிரிவு, சரவாக்கில் அதிக மக்கள்தொகை கொண்ட பிரிவு. கூச்சிங் பிரிவில் வசிக்கும் பெரும்பாலானோர் கூச்சிங் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
டிவிசன் எனும் நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Divisionமலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள்.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது.
பொருளாதாரம்
கூச்சிங் பிரிவு, சரவாக் மாநிலத்தின் தாயகமாக அறியப்படுகிறது. இந்தப் பிரிவு வணிகம், பல்வகைக் கலப்புத் தொழில்கள், சேவைத் துறைகள், கல்வி மையம் மற்றும் சரவாக்கின் சுற்றுலா மையம் போன்றவற்றின் மையமாக விளங்குகிறது.