சிமாங்காங் நகரம், 1974 முதல் 2019 வரை செரி அமான் என்று அழைக்கப்பட்டது. மலாய் மொழியில் அமைதி நகரம் என்று பொருள்படும். லுபார் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த நகரம் சரவாக்கின் தலைநகரான கூச்சிங்கிலிருந்து 193 கிலோமீட்டர்கள் (120 மைல்), மூன்று மணிநேர பயணத்தில் உள்ளது.[2][3]
பொது
காட்டு மரங்கள், செம்பனை, ரப்பர் மற்றும் மிளகு போன்ற பொருள்களுக்கான வர்த்தக மையமாக விளங்கும் இந்த நகரம் ஒரு வேளாண் நகரமாக அறியப்படுகிறது.
சிமாங்காங் நகரம், பத்தாங் லுபார் ஆற்றின் கழிமுக அலைஏற்றம் அல்லது அலை துளைக்கு (Tidal Bore) பிரபலமானது.[2] ஆற்றின் முகத்துவாரத்திலிருந்து வரும் அலைஏற்றம் சுமார் 10 நிமிடங்களில் மிக வேகமாக ஆற்றை நிரப்புகிறது.[4]
அலைஏற்றத்தின் அலை முகடு இரண்டு முதல் மூன்று மீட்டர்கள் (7 முதல் 10 அடி) உயரம் வரை இருக்கும். உலகில் உள்ள சுமார் 48 ஆறுகள் மற்றும் முகத்துவாரங்களில் நடக்கும் இயற்கை நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
சுற்றுலா
சிமாங்காங் நகரம், பத்தாங் ஆய் தேசியப் பூங்கா (Batang Ai National Park) எனும் பூங்காவிற்கான நுழைவாயிலாகவும், ஆறுகளின் ஓரத்தில் இருக்கும் இபான்நீளவீடுகளுக்கான சுற்றுலாத் தளமாகவும் உள்ளது.
சுற்றுலாத்துறை, குறிப்பாக சுற்றுச்சூழல் சுற்றுலா, மற்றும் கலாசார சுற்றுலா போன்றவை உள்ளூர்ப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாகத் திகழ்கின்றன.[5]
காலநிலை
சிமாங்காங் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.
↑Chanson, H. (2009). Environmental, Ecological and Cultural Impacts of Tidal Bores, Benaks, Bonos and Burros. Proceedings of the International Workshop on Environmental Hydraulics IWEH09, Theoretical, Experimental and Computational Solutions, Valencia, Spain, 29-30 Oct., P.A. LOPEZ-JIMENEZ, V.S. FUERTES-MIQUEL, P.L. IGLESIAS-REY, G. LOPEZ-PATINO, F.J. MARTINEZ-SOLANO, and G. PALAU-SALVADOR Editors, Invited keynote lecture, 20 pages (CD-ROM).