சிபுரான் மாவட்டம்
சிபுரான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Siburan; ஆங்கிலம்: Siburan District) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக சிபுரான் நகரம் (Siburan) விளங்குகிறது.[1] 1980-ஆம் ஆண்டுகளில், சிபுரான் மாவட்டம், கூச்சிங் பிரிவில் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் செரியான் பிரிவில் முழு மாவட்டமாக மாற்றம் கண்டது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ (Bidayuh) இனத்தவர்கள் ஆகும்.[2] பொதுசிபுரான் மாவட்டம் ஏறக்குறைய 359.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நிர்வாக நகரம் சிபுரான் ஆகும். 2015-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, சிபுரான் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 72,148 பேர். சிபுரான் மாவட்டத்தின் தலைநகரமான சிபுரான் நகரம், சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங் மாநகரத்திற்கு தெற்கே, ஏறக்குறைய 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia