பாலிங்கியான் நகரத்தின் நடுவில் பாலிங்கியான் ஆறு ஓடுகிறது. மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 286 கி.மீ. (178 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அதே வேளையில் முக்கா நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
குடியேற்றங்கள்
பாலிங்கியான் நகரத்திற்கு அருகில் உள்ள குடியேற்றங்கள்:
லெமாய் - Lemai
கோலா தாதாவ் - Kuala Tatau
பெனிப்பா- Penipah
தாதாவ் - Tatau
கென்யானா- Kenyana
பெனாகுப் - Penakub
ரூமா கெலாம்பு - Rumah Kelambu
கம்போங் ஜபுங்கான் - Kampung Jebungan
முக்கா- Mukah
ரூமா நியாவாய் - Rumah Nyawai
மக்கள்தொகை
பாலிங்கியான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 17,498 ஆகும். இதில் இபான் மக்கள் (68.3%) மற்றும் மெலனாவ் மக்கள் (29.49%) உள்ளனர். அனைத்து மக்களும் ஆறு கிராமங்களிலும் 137 நீண்ட வீடுகளிலும் தங்கியுள்ளனர்.[2]
காலநிலை
பாலிங்கியான் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.