அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில்

வட தீர்த்தேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:அந்தநல்லூர்
கோயில் தகவல்
மூலவர்:தீர்த்தேசுவரர்
தாயார்:பாலசௌந்தரநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கி.மீ. தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது.

இறைவன், இறைவி

இறைவன் வட தீர்த்தேசுவரர் என்றும் ஆலந்துறை மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பாலசுந்தரி என்றும் பால சௌந்தர நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

திருச்சுற்று

பராந்தக சோழன் காலத்திய கற்றளியாக இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya