பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில்

மத்யபுரீசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:பரஞ்சேர்வழி
கோயில் தகவல்
மூலவர்:மத்யபுரீசுவரர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பரஞ்சேர்வழி மத்யபுரீசுவரர் கோயில் என்ற சிவன் கோயில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-சென்னிமலை/பெருந்துறை சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள நால்ரோடு அருகே நத்தக்காடையூர் 10 கி.மீ. என்ற வழிகாட்டியுள்ள திசையில் வலப்புறத்தில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் மத்யுபுரீசுவரர் என்றும் நட்டூர்நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை என்றும், நட்டுவார் குழலியம்மை என்றும் அழைக்கப்படுகிறார்.[1]

திருச்சுற்று

திருச்சுற்றில் கணபதி, பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya