திருத்தணி செங்கல்வராயசுவாமி கோயில்

திருத்தணி செங்கல்வராயசுவாமி கோயில் என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருத்தணி மலை மீது கோயிலின் வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் இடத்தில், கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளை அடித்து இடது புறத்தில் குளம் உள்ளது. வலது புறத்தில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் செங்கழுநீர் விநாயகர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இறைவன்

இக்கோயிலில் உள்ள இறைவன் செங்கல்வராயசுவாமி கோயில் ஆவார். அவரை செங்கழுநீர் வரை அரையன் என்றும் செங்கல்வராயன் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் செங்கல்வராய சுவாமி செங்கழுநீர் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

சிறப்பு

இம்மலையில் பிறரால் எளிதில் அறியமுடியாதபடி விளங்கும் லிங்கத்திருமேனியே வைப்புத்தல சன்னதியாகக் கூறப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya