நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில்

நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

திருவெண்காட்டிலிருந்து இடது புறம் அதே சாலையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இங்குள்ள இறைவன் முனிவாசகசுவாமி ஆவார். இவர் கைலசநாதர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இறைவி மதுரபாஷிணி ஆவார்.[1]

அமைப்பு

கருவறையில் நீண்டு உயர்ந்த பாணத்தோடு மூலவர் உள்ளார். திருச்சுற்றில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya