வளர்புரம் நாகேசுவரர் கோயில்

வளர்புரம் நாகேசுவரர் கோயில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

அரக்கோணம்-திருத்தணி சாலையில் தணிகைப்போளூர் என்னுமிடத்தில் வலப்புறத்தில், ரயில்வே லைனை அடுத்து இடப்புறம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன்

இக்கோயிலில் உள்ள இறைவன் நாகேசுவரர் ஆவார். இறைவி சொர்ணவல்லி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

நவக்கிரகம், சேக்கிழார் நால்வர், விநாயகர், விசுவநாத லிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya