அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு
அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு (Ammonium hexachloroplumbate) என்பது (NH4)2PbCl6என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோபிளம்பேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3] தயாரிப்புசெறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட ஈயம்(IV) டெட்ரா அசிட்டேட்டின் கரைசலில் அமோனியம் குளோரைடைச் சேர்த்தால் அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு உருவாகும்.[4] இயற்பியல் பண்புகள்அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு கனசதுரப் படிக அமைப்பில் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[5][6] இச்சேர்மம் குளிர்ந்த நீரில் சிறிது கரைகிறது. சூடான நீரில் சிதைவடைகிறது. வேதியியல் பண்புகள்குளிர்ந்த செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்துடன் சேர்க்கப்படும் போது, அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு சேர்மம் சிதைந்து, PbCl4சேர்மத்தைக் கொடுக்கிறது.:[6][7]
இச்சேர்மம் டெட்ராகரிம ஈயம் மற்றும் அறுகரிம ஈயம் சேர்மங்களை குளோரினேற்றம் செய்கிறது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia