அம்மோனியம் பால்மிடேட்டு
அம்மோனியம் பால்மிடேட்டு (Ammonium palmitate) என்பது CH3(CH2)14COONH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] பால்மிடிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2] தயாரிப்புபால்மிடிக்கு அமிலத்தை 28-30 சதவீத அமோனியாக் கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் பால்மிடேட்டு உருவாகும். இயற்பியல் பண்புகள்அம்மோனியம் பால்மிடேட்டு மஞ்சள்-வெள்ளை நிறத் தூளை உருவாக்குகிறது. தண்ணீரில் கரையும்.[3] பென்சீன் மற்றும் சைலீனில் சிறிதளவு கரையும். அசிட்டோன், எத்தனால், மெத்தனால், CCl4 அல்லது நாப்தாவில் நடைமுறையில் கரையாது.[4][5] அம்மோனியம் பால்மிடேட்டின் எக்சு-கதிர் விளிம்பு விளைவு ஆய்வுகள், ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்புடன் P21/n என்ற இடக்குழுவைச் சேர்ந்த படிகங்களாகப் படிகமாகிறது.[6] பயன்கள்நீர்ப்புகா துணிகளை உற்பத்தி செய்யவும்[7] தடிமனான மசகு எண்ணெய் தயாரிக்கவும் அம்மோனியம் பால்மிடேட்டு பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia