அம்மோனியம் கேப்ரைலேட்டு
அம்மோனியம் கேப்ரைலேட்டு (Ammonium caprylate) என்பது C8H19NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] கேப்ரைலிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2] தயாரிப்புகேப்ரைலிக்கு அமிலத்துடன் அமோனியாவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் கேப்ரைலேட்டு உருவாகும்.[3] இயற்பியல் பண்புகள்ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் அம்மோனியம் கேப்ரைலேட்டு நீர் உறிஞ்சும் படிகங்களாகப் படிகமாகிறது. தண்ணீரால் எளிதில் நீராற்பகுப்பு செய்யப்படுகிறது. உறைந்த அசிட்டிக் அமிலம் மற்றும் எத்தனாலில் கரையும். மெத்தனாலில் குறைவாகக் கரையும். அசிட்டோன் மற்றும் எத்தில் அசிட்டேட்டில் சிறிதளவு கரையும். குளோரோஃபார்ம் அல்லது பென்சீனில் நடைமுறையில் கரையாது.[4] அம்மோனியம் கேப்ரைலேட்டு உலர் காற்றில் மெல்ல அமோனியாவை இழக்கும். ஆனால் ஈரக்காற்றில் இச்செயல்முறை வேகமாக நிகழும். [5] பயன்கள்அம்மோனியம் கேப்ரைலேட்டு சேர்மம் புகைப்படக் குழம்புகளை உற்பத்தி செய்யவும், பூச்சிக்கொல்லி மற்றும் நூற்புழுக்கொல்லியாகவும், துத்தநாக கேப்ரைலெட்டு உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.[6] உணவுத் தொழிலில் இது ஒரு குழம்பாக்கி, நிலைப்படுத்தி மற்றும் அணிச்சல் எதிர்ப்பு முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia