அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு
அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு (Ammonium neodymium nitrate) என்பது Nd(NH4)2(NO3)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] இந்தச் சேர்மம் நைட்ரேட்டு குழுவைச் சேர்ந்த ஓர் அருமண் உலோக உப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4] தயாரிப்புநியோடிமியம் ஆக்சைடு, நைட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகும்.[5] மேலும், நியோடிமியம் ஆக்சைடு அல்லது நியோடிமியம் கார்பனேட்டை அம்மோனியம் நைட்ரேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் துணை விளைபொருளாக தண்ணீரை வெளியிட்டு அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகிறது:[4]
இயற்பியல் பண்புகள்அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு தண்ணிரில் கரையும். இந்தச் சேர்மம் Nd(NH4)2(NO3)5 • 4H2O—சிவப்பு-ஊதா நிறப் படிகங்களின் கலவை கொண்ட ஒரு நீரேற்றை உருவாக்குகிறது. 47 °செல்சியசு வெப்பநிலையில் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும். வேதிப் பண்புகள்இந்தச் சேர்மம் வலுவான அமிலங்களுடன் வினைபுரிந்து கரையக்கூடிய சேர்மங்களை உருவாக்குகிறது. சிதைக்கப்படும்போது நைட்ரசன் ஆக்சைடுகளை வெளியிடும்.[4] பயன்கள்அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு பல நியோடிமியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. பல்வேறு வேதியியல் வினைகளுக்கு ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia