அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு படிகங்களாக உருவாகும். இது தண்ணீரில் கரையும். Mg(NH4)2(SO4)2· 6H2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்றாக இது உருவாகிறது.[3][4] ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் P21/c, என்ற இடக்குழுவில் a = 0.928 நானோமீட்டர், b = 1.257 நானோமீட்டர், c = 0.620 நானோமீட்டர், β = 107.1°, Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு படிகமாகிறது.[5]
இயற்கைத் தோற்றம்
அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு அறுநீரேற்று இயற்கையாகவே பவுசிங்கால்டைட்டு என்ற பெயரில் காணப்படுகிறது. இது பிக்ரோமரைட்டு குழுவின் ஓர் அரிய கனிமமாகும். முதலில் இத்தாலியின் டசுகனியில் உள்ள புவிவெப்ப வயல்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. அங்கு இது அதன் இரும்பு ஒப்புமையான மோக்ரைட்டுடன் சேர்ந்து காணப்படுகிறது.[6]
↑Zhitova, Elena S.; Sheveleva, Rezeda M.; Zolotarev, Andrey A.; Shendrik, Roman Yu; Pankrushina, Elizaveta A.; Turovsky, Konstantin A.; Avdontceva, Margarita S.; Krzhizhanovskaya, Maria G. et al. (October 2024). "The Crystal Chemistry of Boussingaultite, (NH4)2Mg(SO4)2·6H2O, and Its Derivatives in a Wide Temperature Range" (in en). Minerals14 (10): 1052. doi:10.3390/min14101052. பன்னாட்டுத் தர தொடர் எண்:2075-163X.