அம்மோனியம் பியூட்டைரேட்டு
அம்மோனியம் பியூட்டைரேட்டு (Ammonium butyrate) என்பது C3H7COONH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பியூட்டைரிக்கு அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1] தயாரிப்புஈதரில் உள்ள பியூட்டைரிக்கு அமிலத்துடன் உலர் அமோனியா வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் பியூட்டைரேட்டு உருவாகும்.:[2]
வேதிப் பண்புகள்அம்மோனியம் பியூட்டைரேட்டு அமோனியாவுடன் வினைபுரிந்து குறைந்த வெப்பநிலையில் C3H7COONH4·xNH3 என்ற அமைன் சேர்மத்தை உருவாக்குகிறது.[3] அம்மோனியம் பியூட்டைரேட்டை பாசுபரசு பெண்டாக்சைடுடன் சேர்த்து சூடுபடுத்தும்போது பியூட்டைரோ நைட்ரைல் உருவாகிறது. [4] பயன்கள்அம்மோனியம் பியூட்டைரேட்டு சேர்மம் தோல், எண்ணெய்கள், சோப்புகள் மற்றும் நெசவுத் தொழில் ஆகியவற்றில் ஒரு குழம்பாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[5] மேலும், கால்சைட்டு ஒற்றைப் படிகங்களை வளர்ப்பதற்கு இது ஒரு கனிமமயமாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia