அமோனியம் சயனைடு
அமோனியம் சயனைடு (Ammonium cyanide) என்பது ஒரு நிலையற்ற கனிம சேர்மமாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு NH4CN ஆகும். பயன்கள்கரிமத் தொகுப்புவினைகளில் அம்மோனியம் சயனைடு பயன்படுகிறது. இது நிலைத்தன்மையின்றி இருப்பதால் வணிகரீதியாக விற்பனை செய்யப்படுவதில்லை. தயாரிப்புகுறைவான வெப்பநிலையில் நீரிய அமோனியா கரைசலில் குமிழெழும் ஐதரசன் சயனைடு செலுத்தி அம்மோனியம் சயனைடு தயாரிக்கலாம்.
அமோனியம் கார்பனேட்டுடன் கால்சியம் சயனைடு சேர்த்தும் இதைத் தயாரிக்கலாம்.
உலர்நிலையில், பொட்டாசியம் சயனைடு அல்லது பொட்டாசியம் பெரோசயனைடுடன் அமோனியம் குளோரைடு சேர்ந்த கலவையை சூடாக்கும் போது அமோனியம் சயனைடு ஆவியாக உருவாகிறது. இந்த ஆவியைச் சுருங்கச் செய்து அம்மோனியம் சயனைடு படிகங்கள் தயாரிக்கப்படுகிறது.
வினைகள்அமோனியம் சயனைடு அமோனியா மற்றும் ஐதரசன் சயனைடாக சிதைவடைகிறது. பெரும்பாலும் ஐதரசன் சயனைடின் கருப்பு பலபடியாகவே ஐதரசன் சயனைடு உருவாகிறது.
மேலும், அம்மோனியம் சயனைடு பல உலோக உப்புகளின் கரைசல்களுடன் இணைந்து இரட்டைச் சிதைவு வினைகளில் பங்கேற்கிறது. கிளையாக்சாலுடன் வினைபுரிந்து கிளைசீன் என்ற அமினோஅசிட்டிக் அமிலத்தை உருவாக்குகிறது.
கீட்டோன்களுடன் வினைபுரிந்து அமினோநைட்ரைல்களை உருவாக்குகிறது.
நச்சுத் தன்மைஅம்மோனியா நைட்ரேட்டின் திடவடிவமும் அதன் கரைசலும் அதிக நச்சு தன்மை கொண்டவை. இதனை உட்கொள்வது மரணத்தை ஏற்படுத்தும். திட அம்மோனியா நைட்ரேட் சிதைவடைந்தால் அம்மோனியாவும், மிகவும் நச்சுத்தன்மை உடைய ஐதரசன் சயனைடும் வெளிப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வேதியியல் பகுப்பாய்வுஐதரசன் சயனைடின் அடிப்படை கட்டமைப்பு: ஐதரசன் 9.15%, கார்பன் 27,23%, நைட்ரசன் 63,55%. என்பதாகும். அமோனியம் சயனைடை குறைந்த வெப்பநிலையில் சூடுபடுத்தும் போது அது அமோனியாகவும் ஐதரசன் சயனைடாகவும் சிதைவடைகிறது. அவ்வாறு சிதைவடையும் வாயுக்களைப் பிடித்து பகுப்பாய்வு செய்யமுடியும். அமோனியாவை தரம் பார்த்தல் அல்லது மின்முனை தத்துவத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யலாம். ஐதரசன் சயனைடை நீர்த்த கரைசலை வெள்ளி நைட்ரேட்டு சோதனை மூலமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட அயனி மின்முனை முறை மூலமாகவோ பகுப்பாய்வு செய்யவியலும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia