அமோனியம் நைட்ரைட்டு
அமோனியம் நைட்ரைட்டு (Ammonium nitrite) என்பது NH4NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரசு அமிலத்தின் அமோனியம் உப்பாகக் கருதப்படும் இவ்வுப்பு தனித்த தூய்மையான நிலையில் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஏனெனில் அமோனியம் நைட்ரைட்டு சேர்மம் நிலைப்புத்தன்மை அற்றது. அறை வெப்பநிலையிலும் கூட தண்ணீராகவும் நைட்ரசனாகவும் இச்சேர்மம் சிதைவடைந்து போகிறது. தயாரிப்புஇயற்கையில் அமோனியம் நைட்ரைட்டு காற்றில் தோன்றுகிறது. நைட்ரசன் டையாக்சைடையும்ம் நைட்ரிக் ஆக்சைடையும் சம அளவு ஈர்த்தல் செயல்முறை மூலமாக இதை தயாரிக்க முடியும் [1]. அமோனியாவுடன் ஓசோன் அல்லது ஐதரசன் பெராக்சைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமாகவும் தயாரிக்கலாம். பேரியம் நைட்ரைடு அல்லது ஈய நைட்ரைடுடன் அமோனியம் சல்பேட்டு அல்லது வெள்ளி நைட்ரைடும் அமோனியம் குளோரைடும் கலந்த கலவை அல்லது அமோனியம் பெர்குளோரேட்டும் பொட்டாசியம் நைட்ரைடும் கலந்த கலவையைப் பயன்படுத்தி வீழ்படிவாக்குதல் மூலமும் அமோனியம் நைட்ரைட்டு தயாரிக்க முடியும். வினையில் உருவாகும் வீழ்படிவு வடிகட்டப்பட்டு கரைசல் அடர்த்தியாக்கப்படுகிறது. தண்ணீரில் கரையக்கூடிய நிறமற்ற படிகங்கள் உருவாகின்றன. ஆனால் சூடுபடுத்தப்பட்டால் அல்லது அமிலத்தின் முன்னிலையில் தண்ணீர் மற்றும் நைட்ரசனாக சிதைவடைந்து விடுகிறது [2]. குறைவான வெப்பநிலையிலும், உயர் pH மதிப்பிலும் அமோனியம் நைட்ரைடடு நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது. pH 7.0 விற்கு குறைவாக இருக்கும் நிலை ஏற்பட்டால் வெடிக்கவும் நேரிடலாம். அமோனியா கரைசலைச் சேர்ப்பதன் மூலமாக பாதுகாப்பான காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பை நிலைப்படுத்திக் கொள்ளலாம். அமோனியம் நைட்ரைட்டு, அமோனியாவின் விகிதம் கண்டிப்பாக 10% அளவிற்கு அதிகமாக இருக்க வேண்டும். NH4NO2 → N2 + 2 H2O பண்புகள்60–70 ° செ வெப்பநிலையில் அமோனியம் நைட்ரைட்டு வெடிக்க நேரிடலாம்[1]. உலர் படிகநிலையைக் காட்டிலும் அடர்த்தியான நீரிய கரைசலில் கரைந்துள்ள போது இச்சேர்மம் விரைவாக சிதைவடைந்து விடுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia