அம்மோனியம் பெர்புரோமேட்டு
அம்மோனியம் பெர்புரோமேட்டு (Ammonium perbromate) என்பது NH4BrO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒத்த பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறது ஆனால் இதை தனிமைப்படுத்துவது கணிசமாக மிகவும் கடினமாகும். மேலும் சிதைவடைவதில் சிக்கலான வழிமுறையைக் கொண்டுள்ளது.[1][2][3] பண்புகள்அம்மோனியம் பெர்புரோமேட்சு அறை வெப்பநிலையில் நிலைப்புத்தன்மையுடன் காணப்படும். அம்மோனியம் பெர்குளோரேட்டைப் போன்ற கரைதிறன்களையும் கொண்டிருக்கிறது. அம்மோனியம் பெர்குளோரேட்டுடன் ஒப்பிடுகையில் அம்மோனியம் பெர்புரோமேட்டு மிகக் குறைவான நீருறிஞ்சும் தன்மையைப் பெற்றுள்ளது. அதிக ஈரப்பதம் உள்ள வளிமண்டலத்தில் பராமரிக்கப்படும் போது எடை அதிகரிப்பை காட்டுகிறது.[2] அம்மோனியம் பெர்புரோமேட்டு 170 மற்றும் 180 பாகை செல்சியசுக்கு இடைப்பட்ட வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. மேலும் சில சமயங்களில் வெடிப்பதையும் அவதானிக்க முடிந்தது.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia