அம்மோனியம் லாரேட்டு

அம்மோனியம் லாரேட்டு
Ammonium laurate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;தோதெக்கனோயேட்டு
வேறு பெயர்கள்
அசானியம் தோதெக்கனோயேட்டு, அம்மோனியம் தோதெக்கனோயேட்டு
இனங்காட்டிகள்
2437-23-2 N
ChemSpider 140381
EC number 219-439-6
InChI
  • InChI=1S/C12H24O2.H3N/c1-2-3-4-5-6-7-8-9-10-11-12(13)14;/h2-11H2,1H3,(H,13,14);1H3
    Key: VJCJAQSLASCYAW-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 159661
  • CCCCCCCCCCCC(=O)[O-].[NH4+]
UNII 50IRX6VLIF
பண்புகள்
C12H27NO2
வாய்ப்பாட்டு எடை 217.35 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.79 கி/செ.மீ3
உருகுநிலை 45 °செல்சியசு[1]
கொதிநிலை 100 °செல்சியசு
கரையும்
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
தீப்பற்றும் வெப்பநிலை 134.1 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் லாரேட்டு (Ammonium laurate) என்பது NH4C6H7O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லாரிக் அமிலத்தின் அமோனியம் உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[3]

தயாரிப்பு

உலர்ந்த அம்மோனியாவை தூய லாரிக் அமிலத்தின் நீரிய கரைசலுடன் கலப்பதன் மூலம் அம்மோனியம் லாரேட்டை தயாரிக்கலாம்.[1] இந்தத் தொழில்துறை தயாரிப்பு முறைக்கு, நீர் சார்ந்து அல்லாத கரைப்பானில் கரைக்கப்பட்ட லாரிக் அமிலக் கரைசலில் அம்மோனியா வாயுவை அறிமுகப்படுத்துவது அவசியமாகும். விளைபொருளின் உற்பத்தியின் அளவு மற்றும் தரம் இரண்டையும் அதிகபட்சமாகப் பெற, கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்ட வெப்பநிலை மற்றும் அழுத்த அளவுருக்களின் கீழ் இந்த செயல்முறை நடத்தப்படுகிறது.

மேலும், லாரிக் அமிலத்தை அம்மோனியம் ஐதராக்சைடை வினைபுரியச் செய்வதன் மூலமும் அம்மோனியம் லாரேட்டைப் பெறலாம். இந்த செயல்முறை பொதுவாக லாரிக் அமிலத்தை எத்தனால் போன்ற கரைப்பானில் கரைப்பதன் மூலம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து கலவையில் அம்மோனியம் ஐதராக்சைடு சேர்க்கப்படுகிறது.[4]

இயற்பியல் பண்புகள்

அம்மோனியம் லாரேட்டு சேர்மம் பொதுவாக வெள்ளை நிறத்தில் இருந்து அரை வெள்ளை நிறத்தில் இருக்கும் திடப்பொருளாகவோ அல்லது தூளாகவோ தோன்றும். தண்ணீரில் இது கரையும். இச்சேர்மம் பல்வேறு பயன்பாடுகளில் பயனுள்ளதாக அமைகிறது.[5]

அம்மோனியம் லாரேட்டை உள்ளிழுக்கப்பட்டாலோ, ​​உட்கொள்ளப்படும்போதோ அல்லது தோலுடன் தொடர்பு கொள்ளும்போதோ தீங்கு விளைவிக்கும். தோல் எரிச்சல் மற்றும் கண் பாதிப்பை ஏற்படுத்தும். நெருப்பு எரியும் நிலைமைகளின் கீழ் இது தீங்கு விளைவிக்கும். புகையை வெளியிடும்.

பயன்கள்

அமோனியம் லாரேட்டு சேர்மம் நுரைக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு மேற்பரப்பு செயலி, ஈரமாக்கும் முகவர், குழம்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]

மேலும், பல்வேறு நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் மக்கும் பலபடிகளான பாலி ஐதராக்சி ஆல்கனோயேட்டுகளை பிரித்தெடுத்து மீட்டெடுப்பதில் அம்மோனியம் லாரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Synthesis routes of Ammonium laurate". benchchem.com. Retrieved 26 March 2025.
  2. "Ammonium laurate" (PDF). chemos.de. Retrieved 26 March 2025.
  3. "NCATS Inxight Drugs — AMMONIUM LAURATE". drugs.ncats.io (in ஆங்கிலம்). Retrieved 26 March 2025.
  4. "Buy Ammonium laurate | 2437-23-2 | BenchChem". benchchem.com. Retrieved 26 March 2025.
  5. "CAS 2437-23-2: Ammonium laurate | CymitQuimica" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). cymitquimica.com. Retrieved 26 March 2025.
  6. Heising, Leonard F. (1954). Review of the Ammonia Industry and Its Application to North Dakota (in ஆங்கிலம்). U.S. Department of the Interior, Bureau of Mines. p. 57. Retrieved 26 March 2025.
  7. Cheremisinoff, Nicholas P. (31 July 1989). Handbook of Polymer Science and Technology (in ஆங்கிலம்). CRC Press. p. 362. ISBN 978-0-8247-8173-6. Retrieved 26 March 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya