அம்மோனியம் வலேரேட்டு

அம்மோனியம் வலேரேட்டு
Ammonium valerate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம்;பெண்டனோயேட்டு
வேறு பெயர்கள்
பெண்டனோயுக்கு அமில அமோனியம் உப்பு
இனங்காட்டிகள்
42739-38-8 N
ChemSpider 142697
EC number 227-767-6
InChI
  • InChI=1S/C5H10O2.H3N/c1-2-3-4-5(6)7;/h2-4H2,1H3,(H,6,7);1H3
    Key: RXQNHIDQIJXKTK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 162525
  • CCCCC(=O)O.N
UNII 0U3170A41K
பண்புகள்
C5H13NO2
வாய்ப்பாட்டு எடை 119.16 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
உருகுநிலை 108 °செல்சியசு
கரையும்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 107.4 °செல்சியசு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

அம்மோனியம் வலேரேட்டு (Ammonium valerate) என்பது CH3(CH2)3COONH4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] வலேரிக் அமிலத்தினுடைய அம்மோனியம் உப்பு என இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[2][3]

தயாரிப்பு

வலேரிக்கு அமிலத்துடன் அம்மோனியம் ஐதராக்சைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அம்மோனியம் வலேரேட்டு உருவாகும்.

இயற்பியல் பண்புகள்

அம்மோனியம் வலேரேட்டு தண்ணீர் மற்றும் ஆல்ககாலில் மிக எளிதாகக் கரையும். மேலும் ஈதரிலும் நன்றாகக் கரையும். வலேரிக்கு அமிலத்தின் சிறப்பியல்பு மணத்தையும் கூர்மையான, இனிப்புச் சுவையையும் கொண்டுள்ளது.[4]

பயன்கள்

உணவுத் தொழிலில் ஒரு சுவையூட்டும் முகவராகவும், வேதியியல் தொகுப்பு வினைகளில் ஒரு வினையாக்கியாகவும் அம்மோனியம் வலேரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[5]

கடந்த காலத்தில் நரம்பு கோளாறுகளுக்கு எதிராக அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்ட ஒரு மயக்க மருந்தாக அம்மோனியம் வலேரேட்டு பயன்படுத்தப்பட்டது.[6]

மேற்கோள்கள்

  1. "Ammonium Valerate | The Merck Index Online". merckindex.rsc.org. Retrieved 21 March 2025.
  2. "Compound: AMMONIUM VALERATE (CHEMBL2106510)". ebi.ac.uk. Retrieved 21 March 2025.
  3. "NCATS Inxight Drugs — AMMONIUM VALERATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. Retrieved 21 March 2025.
  4. The National Formulary of Unofficial Preparations (in ஆங்கிலம்). The American PharmaceuticalAssociation. 1942. p. 29. Retrieved 21 March 2025.
  5. "AMMONIUM VALERATE" (in ஆங்கிலம்). Canyon Components. Retrieved 21 March 2025.
  6. Stedman, Thomas (1 January 1920). Stedman's Medical Dictionary (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company. p. 309. Retrieved 21 March 2025.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya