துத்தநாகம் அமோனியம் குளோரைடு
துத்தநாகம் அமோனியம் குளோரைடு (Zinc ammonium chloride) என்பது (NH4)2ZnCl4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். டெட்ரா குளோரோ சிங்கேட்டின் அமோனியம் உப்பாக துத்தநாகம் அமோனியம் குளோரைடு கருதப்படுகிறது. வெப்ப முழுக்கு துத்தநாகப்பூச்சு செயல்முறையில் இது ஓர் இளக்கியாகப் பயன்படுகிறது [1] [2][3]. பயன்கள்துத்தநாக மேற்பூச்சுக்கு உட்படுத்தப்படவேண்டிய எஃகு, இரும்பு ஆக்சைடின் சீரற்ற மேற்பரப்பை நீக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அமிலத் தூய்மையாக்கல் செயல்முறைக்குள் செலுத்தப்படுகிறது. இச்செயல்முறைக்குப் பின்னர் வளிமண்டலத்தில் வெளிப்பட்டவுடன் எஃகின் மேற்பரப்பு மிகுந்த செயல்திறன் மிக்கதாக மாறி உடனடியாக ஆக்சைடு அடுக்குகள் உருவாகத் தொடங்குகின்றன. நீரிய கரைசலில் உள்ள துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கியை எஃகின் மீது பூசுவதால் ஒட்டுமொத்தமாக இவ்வாறு எந்தவிதமான ஆக்சைடுகள் உருவாவதும் தடுக்கப்படுகிறது. மேலும் மேற்பூசும் படிநிலையின்போது உருகிய துத்தநாகம் எஃகு மேற்பரப்புடன் அதிகபட்சமாக படிவதையும் கலப்பதையும் துத்தநாகம் அமோனியம் குளோரைடு இளக்கி அனுமதிக்கிறது[4] [5]. பாதுகாப்புஅமெரிக்க போக்குவரத்துத் துறை துத்தநாகம் அமோனியம் குளோரைடை ஒன்பதாவது வகை தீங்கான பல்வகைப் பொருள் எனப்பட்டியலிட்டுள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia