அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு
அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு (Ammonium diethyl dithiophosphate) C4H14NO2PS2 என்ற் மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் வேதிச் சேர்மமாகும். அமோனியம் O,O′-ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. ஈரெத்தில் இருதயோபாசுபாரிக் அமிலத்தின் அமோனியம் உப்பாக இதை வகைப்படுத்தலாம். ஒருங்கிணைவு வேதியியலில் (C2H5O)2PS2− ஈந்தணைவிக்கான ஒரு மூலமாக அமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு பயன்படுத்தப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியலில் பல்வேறு அயனிகளை நிர்ணயிப்பதற்கும் இச்சேர்மம் பயன்படுகிறது. தயாரிப்புஎத்தனால் மற்றும் அமோனியாவுடன் பாசுபரசு பெண்டாசல்பைடின் வினை மூலம் இதைப் பெறலாம். கட்டமைப்புஅமோனியம் ஈரெத்தில் இருதயோபாசுபேட்டு சேர்மத்தின் படிக அமைப்பில் அமோனியம் நேர்மின் அயனி நான்கு நேர்மின் சுமைகளுடனும், N-H···S ஐதரசன் பிணைப்புகளால் நான்கு நான்முக ஈரெத்தில் எதிர்மின் அயனிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia