இட்ரியத்துடன்அயோடினைச் சேர்த்து மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்.
இட்ரியம் ஆக்சைடுடன் அமோனியம் அயோடைடு சேர்த்து சூடுபடுத்தினாலும் இட்ரியம் அயோடைடு கிடைக்கும்:
இட்ரியம் ஆக்சைடு அல்லது இட்ரியம் ஐதராக்சைடை ஐதரயோடிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்வதன் மூலமும் இட்ரியம் அயோடைடைத் தயாரிக்கலாம்.
இயற்பியல் பண்புகள்
இட்ரியம் அயோடைடு நிறமற்ற செதில் போன்ற படிகங்களாக உருவாகிறது. BiI3 கட்டமைப்பின் வகையை இதன் படிக அமைப்பும் கொண்டிருக்கிறது.[4]
தண்ணீர் மற்றும் எத்தனாலில் நன்றாக கரைகிறது. ஈரெத்தில் ஈதரில் கரையாது.
மூன்று மற்றும் அறுநீரேற்றுகளாகவும் இட்ரியம் அயோடைடு தோன்றுகிறது.[5]
பயன்
தாழ் வெப்பநிலைகளில் இட்ரியம் பேரியம் தாமிர ஆக்சைடு மீக்கடத்தி வேதிப் பொருட்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இட்ரியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
↑"yttrium triiodide" (in ஆங்கிலம்). webbook.nist.gov. Retrieved 2 November 2021.
↑Quarterly Metallurgical Progress Report (in ஆங்கிலம்). United States Atomic Energy Commission, Technical Information Service Extension. June 1960. p. 5. Retrieved 2 November 2021.